New Updates! Fresh news just arrived.

ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

News

ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

October 18, 2026 5:34 pm
ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!
பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணியான ஷிராந்தி ராஜபக்ஷவினை, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு நவலோக (தனியார்) வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியர்களினுடைய ஆலோசனைக்கமையவே அவரது சுகாதார நிலைமையினை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த ஷிராந்தி ராஜபக்ஷ, நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவின் காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும், தேசிய வைத்தியசாலையில் தற்காலிகமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகவே அவர் இவ்வாறு தனியார் வைத்தியசாலையாகிய நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now