ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து வழமைக்கு!
News

நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் நேற்று மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் சில மணித்தியாலங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பொலிஸார், வீதி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் துரித நடவடிக்கையால் மண், கற்கள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டன.
இதையடுத்து, நேற்று இரவு சுமார் 8 மணியளவில் குறித்த வீதியில் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு வந்தது.
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால், மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும், சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.