New Updates! Fresh news just arrived.

திருகோணமலை சம்பவம் - கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமற...

News

திருகோணமலை சம்பவம் - கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

February 2, 2026 12:21 pm
திருகோணமலை சம்பவம் - கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பிலான சம்பவத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தத வண.பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களினை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருகோணமலையிலுள்ள விகாரை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றினை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் லானது ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தினால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புத்தர் சிலையினை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடம் இருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (2) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது, குறித்த குழுவினரினை எதிர்வருகின்ற பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now