New Updates! Fresh news just arrived.

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்: நள்ள...

News

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்: நள்ளிரவில் வந்த அதிரடி அறிவிப்பு!

April 22, 2026 9:37 am
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்: நள்ளிரவில் வந்த அதிரடி அறிவிப்பு!
ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானியத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த முன்மொழிவை முன்வைக்கும் வரை காத்திருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது "ஈரான் அரசாங்கம் தற்போது பிளவுபட்டுக் காணப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் ஒருமித்த கருத்துக்கு வரும் வரை எங்களது தாக்குதலை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். இருப்பினும், ஈரான் மீதான இராணுவ முற்றுகையை (Blockade) தொடருமாறு அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்." என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தனது தரப்பு முன்மொழிவை சமர்ப்பித்து, அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும் வரை போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம், இன்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த போர்நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை தற்காலிகமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now