ஈரான் தாக்குதலை மேலும் 10 நாட்கள் நிறுத்த டிரம்ப் அதிரடி ...
News
ஈரான் தாக்குதலை மேலும் 10 நாட்கள் நிறுத்த டிரம்ப் அதிரடி தீர்மானம்
ஈரான் வலு சக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 06 வரை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தெஹ்ரான் இதனை கோரியாதாகவும், யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சிறப்பாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இரண்டு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை ‘முற்றிலுமாக அழித்துவிடுவோம்’ என டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த நிலையில், இதனை அமெரிக்கா செயல்படுத்தினால், ஹோர்முஸ் நீரிணை முற்றாக மூடப்படும் எனவும், முக்கிய நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் உட்பட மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை ‘மீளமைக்க முடியாத வகையில்’ அழித்துவிடுவோம் என தெஹ்ரான் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து குறித்த தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்த காலக்கெடு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் அதனை மேலும் 10 நாட்களுக்கு நீடிப்பதாக தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.