கொடிகாமத்தில் இரு விபத்துகள் – இருவர் உயிரிழப்பு!
News

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரு தனித்தனி வீதி விபத்துகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கெற்பேலி பகுதியில் கெப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் படுகாயமடைந்த 69 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
அதேவேளை, வரணி பகுதியில் கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதிய மற்றுமொரு விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த 59 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் கெப் மற்றும் கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.