New Updates! Fresh news just arrived.

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!...

News

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

October 8, 2026 5:06 pm
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!
நிலவுகின்ற அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தினுடைய இரண்டு வான் கதவுகள் நேற்று (07) இரவு தொடக்கம் தலா ஒரு அடி வீதம் திறப்பதற்கு நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளரின் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கடந்த சில நாட்களாக நீர்த்தேக்கத்தினுடைய மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்த அதிகளவான மழை காரணமாக, நீர்த்தேக்கத்தினுடைய நீர்மட்டம் வான் பாயும் மட்டம் வரைக்கும் உயர்ந்தமையினாலேயே குறித்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

வான் கதவுகள் திறக்கப்பட்டதினைத் தொடர்ந்து, தெதுறு ஓயாவுக்கு விநாடிக்கு சுமார் 1,400 கன அடிக்கு நீர் திறந்து விடப்பட்டு வருகின்றது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினுடைய பிரதிப் பணிப்பாளரான விராஜ் திசாநாயக்க, இது வெள்ள அபாய நிலைமை அல்ல எனவும், இருப்பினும் நீர்த்தேக்கத்திற்குக் கீழ் பகுதியில் வசிக்கின்ற மக்கள் மற்றும் அதனையடுத்த வீதிகளினை பயன்படுத்துவோர் வரும் நாட்களில் அவதானத்தோடு, செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now