சவுதி அரேபியாவில் இரண்டு விமான நிலையங்கள் மீது தாக்குதல்-...
News
சவுதி அரேபியாவில் இரண்டு விமான நிலையங்கள் மீது தாக்குதல்- மூவர் பலி, 36 பேர் காயம்!
சவுதி அரேபியாவின் அப்ஹா (Abha) மற்றும் கிங் காலித் (King Khalid) சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெறிவித்துள்ளது.
யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதில் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததோடு 28 பேர் காயமடைந்துள்ளனர்.
அதே போன்று, ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விமான நிலைய வசதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய தரப்பினருடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.