சாய்ந்தமருது பகுதியில் இருவர் போதைப் பொருளுடன் கைது! - Gu...
News
சாய்ந்தமருது பகுதியில் இருவர் போதைப் பொருளுடன் கைது!
இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்களானது விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று (23) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸாரினால் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது சாய்ந்தமருதில் வசிக்கும் சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் 2220 மில்லி கிராம் உட்பட போதைப் பொருளை விற்று பெறப்பட்ட ஒரு தொகுதி பணத்தோடு கைதானார். இதே வேளை மற்றுமொரு சந்தேக நபர் மாவடி பகுதியில் வைத்து கைதானார்.அச்சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் 2300 மில்லி கிராமுட்பட ஐஸ் போதைப் பொருள் 60 மில்லிகிராம் பக்கேற் 2 உம் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நிலையில் மீட்கப்ட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொகுதி பணமும் மீட்கப்பட்டது. மேற்குறித்த பணம் போதைப்பொருள் விற்பனையில் சம்பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறிப்பிட்டனர்.