போதைப்பொருள் விற்பனை சந்தேக நபர்கள் இருவர் கைது!
News

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களினை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களினை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களும் போதைப்பொருட்களுடன் கைதாகினர்.
இவ்வாறு கைதாகிய இருவரும் நிந்தவூர் பகுயினை சேர்ந்தவர்கள் என்பதோடு, ஏலவே குறித்த போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதன்படி, இரண்டு சந்தேக நபர்களும் குறித்த பகுதியில் மிக நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கைதானவர்கள் 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதோடு, 40 கிராம் ஐஸ் மற்றும் 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பனவும் சந்தேக நபர்கள் வசமிருந்து விசேட அதிரடிப்படையினர் மீட்டு சட்ட நடவடிக்கைக்கா நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்