New Updates! Fresh news just arrived.

தேசியப் பாடல் போட்டி “ஸ்வர மஞ்சரி” இறுதிப் போட்டியில் யாழ...

News

தேசியப் பாடல் போட்டி “ஸ்வர மஞ்சரி” இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்!

October 14, 2026 4:55 pm
தேசியப் பாடல் போட்டி “ஸ்வர மஞ்சரி” இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்!
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிப் போட்டி நாளை (15) பத்தரமுல்லை, சுஹுருபாயா கட்டடத்தில் காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.

சமூக சேவைகள் திணைக்களத்தால் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தினுடைய ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 போட்டியாளர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தினை சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரினவ சேர்ந்த றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகியோர் அடங்குகின்றனர்.

இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லவுள்ள இருவரும் இன்றைய தினம் (14) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றபோது, இப்போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெறுவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அரசாங்க அதிபர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி மற்றும் மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.உமாசங்கர் யாழ்ப்பாண பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ற.தர்மினி ஆகியோர் உடனிருந்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now