New Updates! Fresh news just arrived.

யால தேசிய வனத்தின் இரு பகுதிகள் தற்காலிகமாக மூடல்!

News

யால தேசிய வனத்தின் இரு பகுதிகள் தற்காலிகமாக மூடல்!

August 26, 2026 6:33 pm
யால தேசிய வனத்தின் இரு பகுதிகள் தற்காலிகமாக மூடல்!
யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் பகுதிகளை குறிப்பிட்ட காலத்திற்கு மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் 14 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை குறித்த இரு பகுதிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

யால பகுதியில் நிலவும் வறட்சியான வானிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now