New Updates! Fresh news just arrived.

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாண...

News

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர் கைது!

June 3, 2026 12:35 pm
ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர் கைது!
நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவமானது செவ்வாய்க்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் நடமாடிய 2 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் பொலிஸார் தமது உயிரை பணயம் வைத்து அச்சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.குறித்த 36 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய சென்ற நிலையில் சந்தேக நபர் பொலிஸாரை தாக்க முற்பட்டதுடன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.பின்னர் நீண்ட தேடுதலின் போது மீண்டும் குறித்த சந்தேக நபர் கைதானார்.

இதன்போது குறித்த சம்பவத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் இடது காலில் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார் என்று எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சூட்சுமமாக விநியோகத்து வந்த மற்றுமொரு 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் அன்றைய தினம் இரவு கைது செய்துள்ளனர்.

அத்தோடு, கைதான குறித்த 2 சந்தேக நபர்களினையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸார் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now