சாமர சம்பத் உள்ளிட்ட இருவர் மீண்டும் விளக்கமறியலில்! - Gu...
News
சாமர சம்பத் உள்ளிட்ட இருவர் மீண்டும் விளக்கமறியலில்!
இலஞ்சத்தை பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவருக்கும் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரைக்கும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, முறையான அனுமதியின்றி பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உதவியதன் ஊடாக இலஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டமை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக இவ்வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இன்றைய தினம் குறித்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளருக்கும் வழக்கு தொடர்பில் சமர்ப்பித்த பிணை கோரிக்கையினை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.