முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் உட்பட இருவர் கை...
News
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் உட்பட இருவர் கைது!
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையினுடைய கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரினையும் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய 30,000 ரூபா பணத்தினை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையினுடைய படுக்கை விரிப்புகளினை சலவை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள முறைப்பாட்டாளருக்கு, மார்ச் மாதத்திற்காக வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு காசோலையினை விடுவிப்பதற்காக குறித்த 30,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.