New Updates! Fresh news just arrived.

நிந்தவூர் கடற்பகுதியில் நீராடச் சென்ற இருவர் மாயம்

News

நிந்தவூர் கடற்பகுதியில் நீராடச் சென்ற இருவர் மாயம்

November 21, 2026 3:47 pm
நிந்தவூர் கடற்பகுதியில் நீராடச் சென்ற இருவர் மாயம்
நிந்தவூர் கடற்பகுதியில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.

கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவர் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகளைக் கடற்படை சுழியோடிகள் குழுவினர், பிரதேச மக்கள் மற்றும் நிந்தவூர் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now