ஓய்வூதிய ஒழிப்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இர...
News
ஓய்வூதிய ஒழிப்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல்!
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய ஒழிப்பு மசோதாவின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என தீர்ப்பளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எம். பிரேமசிறி, நவரட்ண பண்டா, பி.எம். தீபால் குணசேகர மற்றும் சமன்சிறி ஹேரத் ஆகியோர் மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
மற்றொரு மனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில், முன்மொழியப்பட்ட மசோதாவின் சில பிரிவுகள் இந்த நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி, தொடர்புடைய மசோதா நிறைவேற்றப்பட்டால், அது பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் தங்கள் மனு மூலம் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.