New Updates! Fresh news just arrived.

குவைத்தில் இலங்கை பெண்கள் இருவர் மர்மமாக உயிரிழப்பு - விச...

News

குவைத்தில் இலங்கை பெண்கள் இருவர் மர்மமாக உயிரிழப்பு - விசாரணை ஆரம்பம்

October 24, 2026 11:11 am
குவைத்தில் இலங்கை பெண்கள் இருவர் மர்மமாக உயிரிழப்பு - விசாரணை ஆரம்பம்
குவைத்தின் Ali Sabah Al-Salem மற்றும் Al-Nahda ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இரண்டு இலங்கைப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்விரு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முதலாவது சம்பவத்தில், அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைந்துள்ள சேமிப்பு அறையில் இருந்து இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு பிறந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மரணம் சந்தேகத்திற்கு இடமான மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் சட்ட மருத்துவப் பரிசோதனைக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அல்-நஹ்தா பகுதியில் 1999ஆம் வருடம் பிறந்த இன்னொரு இலங்கைப் பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரணத்திற்கான காரணத்தையும் சம்பவத்தின் பின்னணியையும் கண்டறிவதற்காக சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க தடயவியல் நிபுணர்கள், மருத்துவப் பரிசோதகர்கள் அத்துடன் புலனாய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now