New Updates! Fresh news just arrived.

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது...

News

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது!

March 4, 2026 9:31 am
யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது!
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (4) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாகவும், சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்களிடம் இருந்து 800 லீட்டர் டீசல், டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரினையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now