கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் கண்டுபிடி...
News
கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் கண்டுபிடிப்பு!
கிளிநொச்சி - பரந்தன், உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவினுடைய விளாவோடை பகுதியில் வெடிக்காத நிலையில் இரண்டு குண்டுகள் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, விளாவோடை பகுதியிலுள்ள நெல் வயல் சாலையின் அருகில், இரண்டு 60 மில்லிமீற்றர் வெடிக்காத குண்டுகள் இருப்பதினை அப்பகுதி மக்கள் கண்டனர்.
பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலும்,சம்பவ இடத்திற்குவருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் குறித்த இடத்தின் பாதுகாப்பினை பலப்படுத்தியதோடு, வெடிக்காத இரு குண்டுகளினையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து மேலதிக விசாரணைகளினை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்