New Updates! Fresh news just arrived.

5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது...

News

5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026 3:36 pm
5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
சுமார் 5 கோடியே 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாகக் கூறப்படும் இரண்டு இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (09) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தெமட்டகொட மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரு பெண்களிடமிருந்தும் 5 கிலோ 372 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க வந்தடைந்த அவர்களின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now