யாழில் ஹெரோயினுடன் இரண்டு இளைஞர்கள் கைது!
News

இன்றையதினம் யாழில் 4 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் வைத்து 29 மற்றும் 32 வயதுடைய குறித்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்