நேபாள வெள்ளப் பாதிப்பில் ஐ.நா. உதவிக்கரம்!
News

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது ஆதரவை வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நேபாள அரசாங்கத்தின் தலைமையில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. குழுக்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் தேவையான நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களைத் தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.