New Updates! Fresh news just arrived.

கீழ் உழைப்பு சேவை பட்டதாரிகளினை கவனத்தில் கொள்ளப்பட வேண்ட...

News

கீழ் உழைப்பு சேவை பட்டதாரிகளினை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்!

February 15, 2026 3:13 pm
கீழ் உழைப்பு சேவை பட்டதாரிகளினை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்!
தற்சமயத்தில் நமது நாட்டில் அரச சேவையில் உயர் தகுதி பெற்றுள்ள பலர் கீழ் உழைப்புச் சேவையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதன்படி, கீழ் உழைப்புச் சேவை பட்டதாரிகளினை நாட்டின் இலவசக் கல்வி முறையில் கற்பித்தல் சேவைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கான செல்லுபடியாகும் பட்ட தகுதி திகதியினை 2025 டிசம்பர் 31 வரைக்கும் நீடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய வரையறுக்கப்பட்ட ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சையில் குறைபாடுகள் காணப்படுவதினால், கீழுழைப்புச் சேவையிலுள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தும் முகமாக அதன் பிரதிநிதி குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினை சந்தித்த நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் கூட, இளமானி மற்றும் முதுமானி பட்டங்களினை பெற்று, அரச சேவையில் அலுவலக உதவியாளர்களாக, தொழிலாளர்களாக, ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிவோர் ஏராளமாக காணப்படுகின்றனர்.

இவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அரச சேவையில் கீழுழைப்புச் சேவையில் பணி புரிகின்ற பட்டதாரிகளுக்கு, பட்டதாரிகளினை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையில் விண்ணப்ப காலம் 19 ஆம் திகதியோடு முடிவடைகின்றது. இதற்கு முன் இவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now