மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந்தெரியாத ஆண் சடலம்: ...
News
மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந்தெரியாத ஆண் சடலம்: காரைதீவு பொலிஸார் தீவிர விசாரணை!
அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளைக் காரைதீவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்