New Updates! Fresh news just arrived.

கட்சியின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் மேலும் வலுப்படுத்...

News

கட்சியின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் மேலும் வலுப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி புனரமைப்பு கலந்துரையாடல்!

June 14, 2026 5:03 pm
கட்சியின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் மேலும் வலுப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி புனரமைப்பு கலந்துரையாடல்!
அம்பாறை மாவட்ட சம்மாந்துறைத் தொகுதிக்குட்பட்ட இறக்காமம் பிரதேசத்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் புனரமைப்பு மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று இறக்காமத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் மற்றும் கட்சியின் அடித்தள கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், கட்சியின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வட்டார அமைப்பாளர்கள், இளைஞர் அமைப்பாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நப்ரிஸ் மற்றும் இறக்காமம் – வரிப்பத்தான்சேனைப் பகுதியைச் சேர்ந்த வட்டார அமைப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், எதிர்கால அரசியல் மற்றும் சமூக சேவைத்திட்டங்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில், “ஒற்றுமையுடன் முன்னோக்கி செல்வோம்; மக்கள் சேவைக்காக நாம் தயாராக உள்ளோம்” என்ற உறுதிமொழியுடன் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த அனைவரும் உறுதியளித்தனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now