மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: பொலிஸ் ஊடரங்கு அமுல்! - G...
News
மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: பொலிஸ் ஊடரங்கு அமுல்!
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 246/கெந்தலியத்த வீதி - மேற்கு, 246/சீ கெந்தலியத்த வீதி - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையினுள் இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டது.
இதில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
தற்போது மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலையினுள் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து, கைதிகளின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அங்கு சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டனர்.
இதனையடுத்து, இந்நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ராகம பொலிஸ் பிரிவின் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.