ஒலியமைப்பு சீரின்மையால் மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் அம...
News
ஒலியமைப்பு சீரின்மையால் மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!
மானிப்பாய் பிரதேச சபையினுடைய மாதாந்த அமர்வானது இன்றைய தினம் தவிசாளரான ஜெசீதன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது ஒலியமைப்பு சீராக இல்லாமையால், பின்னால் இருந்த உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் விளங்காததினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியினுடைய உறுப்பினரான த.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், சபை மண்டபத்தில் Projector உள்ளது. இருந்தபோதிலும் அது இயக்கப்படுவது இல்லை. கடந்த கூட்ட அறிக்கையினை சமர்ப்பிக்கும்போது அதனை projector மூலம் காண்பித்தால் நன்று.
கடந்த கூட்ட அறிக்கையில் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கூறும்போது ஒலிவாங்கி சீரின்மையால் பின்னால் இருப்பவர்களுக்கு விளங்காமையால். projector இனை இயங்க வைக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் பின்னால் இருந்த உறுப்பினர்களும் தமக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்கவில்லை என சத்தமிட்டனர்.
அதற்கு பதிலளித்த தவிசாளர், இதுவரைக்கும் அவ்வாறான நடைமுறை இல்லை. அப்படி காண்பிக்க முடியாது. அனைவருக்கும் அறிக்கை தரப்பட்டுள்ளது.என குறிப்பிட்டார். ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கியினை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ரம் தெரிவித்தார்.
பு.கஜிந்தன்