New Updates! Fresh news just arrived.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான தகவல்...

News

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான தகவல்!

April 2, 2026 12:39 pm
லிட்ரோ சமையல் எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான தகவல்!
சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் ஊடகங்கள் வினவிய போது, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அதன்படி, புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

அதுவரையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now