New Updates! Fresh news just arrived.

பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை...

News

பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை...

April 1, 2026 2:00 pm
பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை...
நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாக, நீரை மிகவும் சிக்கனமாகவும் அவதானமாகவும் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது 75% என்ற அளவிற்கு குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், திணைக்களத்தின் கீழ் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் சராசரியாக 75% இற்கும் அதிகமாகவே காணப்படுவதால், இந்த சிறுபோகப் பயிர்ச்செய்கைக்கான நீரை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் மட்டம் குறைவடைந்து வருவதால், குடிநீர் தேவைக்காக ஆறுகளில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படும் பகுதிகளில் கடல் நீர் (உவர் நீர்) உட்புகும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நில்வலா கங்கை,களனி கங்கை மற்றும் களு கங்கை போன்ற ஆறுகளில் நீர் மட்டம் மேலும் குறையும் பட்சத்தில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படலாம் என்பதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்காக நீரைப் பயன்படுத்தும் போது வீண் விரயங்களைத் தவிர்த்து, மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now