New Updates! Fresh news just arrived.

ஈராக்கிலிருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் - Gur...

News

ஈராக்கிலிருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள்

September 30, 2026 9:56 am
ஈராக்கிலிருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள்
20 வருடங்களுக்கு பின்னர் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறுவது அண்மை நாடான ஈரானிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஈராக்கின் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழலே உருவாகியுள்ளது.

அணு ஆயுதங்கள் அத்தோடு இரசாயன ஆயுதங்கள் போன்ற பேரழிவு ஆயுதங்களை ரகசியமாக தயாரிப்பதாகக் கூறி, மேற்கு ஆசிய நாடான ஈராக் மீது, 2003ல் அமெரிக்கா போர் தொடுத்திருந்தது.

ஈராக் அதிபராக இருந்த போது கைது செய்யப்பட்ட சதாம் உசைன், 2006ல் துாக்கிலிடப்பட்டார்.

ஈராக் உடனான போருக்கு பின்னர் அந்நாட்டின் பாதுகாப்பு அத்தோடு வேறு சில காரணங்களுக்காகவும் அமெரிக்க படைகள் அங்கேயே தங்கி இருந்தன.

இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த முறை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் தலைமையிலான அரசின் காலத்தில், ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போதிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த வெளியேற்றம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க படைகள் முழுதும் இன்று வெளியேற முடிவு செய்துள்ளது.

​இது மேற்கு ஆசிய நாடுகளின் அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அமெரிக்கப் படைகளின் இந்த வெளியேற்றத்தை ஈரானும் அதன் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் மிகப் பெரிய வெற்றியாகவே கொண்டாடுகின்றன.

முக்கிய தளமான அல் அசாத் விமானப்படை தளம் உள்ளிட்டவற்றிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதனால், ஈராக் மீதான தன் அரசியல் அத்தோடு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு செல்வாக்கை ஈரான் மேலும் விரிவுபடுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும், ஈராக்கின் பாதுகாப்பில் ஒரு வெற்றிடம் உருவாகலாம் எனவும் சர்வதேச ஆய்வாளர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தலையெடுக்க வாய்ப்புள்ளதோடு, வடக்கில் உள்ள குர்ஷித் தன்னாட்சி பகுதிக்கு வெளிப்படையான அச்சுறுத்தல்கள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

அமெரிக்கப்படைகள் வெளியேறுவதனால், ஈராக் அரசு சொந்த நாட்டை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு தலையீடுகளை சமாளிக்க வேண்டிய கடினமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now