அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் - பாகிஸ்...
News
அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் - பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தனது X சமூக ஊடகப் பதிவில் கருத்து தெரிவித்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக இரு தரப்புகளுடனும் தாம் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்களின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் எப்போதும் அமைதி இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா–ஈரான் இடையிலான இந்த சாத்தியமான அமைதி ஒப்பந்தம் உலக அரசியல் நிலைமைக்கு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.