அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்
News

இன்று (3) முதல் மீண்டும்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நிகழும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதனையும் அவர் நிர்ணயிக்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை அவசரமாக மீண்டும் திறப்பது அத்துடன் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில், உடனடியாக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலைத் தாம் கைவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.
ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவதற்கு வழிவகுக்கும் உடன்பாட்டை நிறைவு செய்ய அவகாசம் கோரியுள்ளதாகவும்,
ஈரானும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் நீரிணையை "உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், அவர் மேலலும் அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
தெஹ்ரான் விரைவாக ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும் மேலும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதன் போது செய்தியாளர்களிடம் ட்ரம்ப் திங்கட்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், அது எங்கு நடைபெறும் அல்லது யார் யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய எந்த விவரங்களையும் அவர் வெளியிடவில்லை.
ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்குப் பதிலளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார்.
நான் மனிதர்களைக் கொல்ல விரும்பவில்லை, ஏனெனில் ஏராளமானோர் இறக்கிறார்கள், அதை நாங்கள் விரும்பவில்லை அதற்கு பதிலாக நான் ஓர் உடன்பாட்டை எட்டவே விரும்புகின்றேன் என்று மேலும் ட்ரம்ப் தெரிவித்தார்.