New Updates! Fresh news just arrived.

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்...

News

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

March 4, 2026 10:17 am
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்களுக்குத் தேவை ஏற்பட்டால் அமெரிக்கக் கடற்படையானது நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்களினைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், எரிபொருள் விநியோகம் தடைப்படாமல் இருக்க குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய மசகு எண்ணெய் விலையேற்றத்தினை கட்டுப்படுத்தவும், வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா குறித்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

கப்பல்கள் மீது ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமானால், அமெரிக்கப் படைகள் உடனடியாகத் தலையிடும் எனவும் ஓவல் அலுவலகத்தில் இருந்து ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now