New Updates! Fresh news just arrived.

ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகள் – பேச்சுவார்த்தைக்கு அழ...

News

ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகள் – பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

August 24, 2026 6:47 am
ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகள் – பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அந்நாட்டு திறைசேரி அறிவித்துள்ளது.

அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் புதிய தடைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

எனினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் விரக்தியின் வெளிப்பாடாகவே கருதுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். புதிய தடைகள் மூலம் ஈரானை அடிபணியச் செய்யும் முயற்சியும் வெற்றியடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நீதி மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே சர்வதேச தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் இராணுவ நடவடிக்கைகளால் அந்நாட்டின் உட்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்கு மத்தியிலும் ஈரான் தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளும் அதிகரித்துள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now