கச்சா எண்ணெய் விலை தொடர்பில் அமெரிக்க அதிபர் அதிரடி அறிவி...
News
கச்சா எண்ணெய் விலை தொடர்பில் அமெரிக்க அதிபர் அதிரடி அறிவிப்பு!
தற்போபோது அமெரிக்காவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு தொடர்பில் அதிரடியான கருத்துக்களினை பகிர்ந்துள்ளார்.
இந்த கிரகத்திலேயே அதிகளவான கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம்தான் உள்ளதாகவும் அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு யாருக்கும் தெரியாத பல இரகசியமான வழிகளில் இருந்து எண்ணெய் வந்து கொண்டிருப்பதாகவும், அவற்றில் சிலவற்றை தான் வெளியில் பகிரங்கமாகச் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயினுடைய விலை 300 டொலருக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவினுடைய உத்திகளால் அது தற்போது 96 டொலர் என்னும் அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வருகின்ற அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிவுக்கு வந்த பின்னர், கச்சா எண்ணெயினுடைய விலை முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமாகக் குறையும் என்பதினால் மக்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வருகின்ற பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயரும் என்னும் அச்சம் நிலவியது. குறித்த சூழ்நிலையில், அமெரிக்காவின் எரிபொருள் இருப்பு தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்த உரை அமைந்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.