ஈரானுடன் ஒரு புதிய போரைத் தொடங்கக்கூடும்: அமெரிக்க அதிபர்...
News
ஈரானுடன் ஒரு புதிய போரைத் தொடங்கக்கூடும்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
ஈரானுடன் ஒரு புதிய போரைத் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் கீழ் ஈரானிய அதிகாரிகளுடன் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கடந்த வாரம் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் நடைபெறும் முதல் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் நடைபெறுகின்றன.
ஏப்ரல் மாதம் முதல் அமுலில் உள்ள போர் நிறுத்தம், மேலும் குறைந்தது 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும், லெபனானில் இடம்பெறுகின்ற போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் குறித்த ஒப்பந்தம் வழிவகுத்தது.
இருப்பினும், லெபனானில் சண்டையை நிறுத்துவதில் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தடுத்துள்ளதாக ஈரான் தெரிவித்தது.
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் போன்ற முக்கியப் பிரச்சினைகள் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படாது என்றும் அது குறிப்பிட்டது.
இதற்கிடையில், லெபனானில் உள்ள ஈரானின் அதிக ஊதியம் பெறும் தூதுக்குழுவினர் உடனடியாக பிரச்சனைகளை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
"அவ்வாறு அவர்கள் செய்யாமல் போனால் , கடந்த வாரத்தில் செய்தது போலவே, ஆனால் அதைவிட கடுமையாக, மீண்டும் நாங்கள் ஈரானை அதிகமாக தாக்குவோம்!!!" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் ஜலசந்தியை மூடினால், "அவர்களுக்கு ஒரு நாடே மிஞ்சியிருக்காது" என்றும் அவர் ஈரானிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.