கிரீன்லாந்தை இணைப்பதை எதிர்க்கும் நாடுகள் மீது புதிய வரிக...
News
கிரீன்லாந்தை இணைப்பதை எதிர்க்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை இணைப்பதற்கான தனது திட்டத்தை எதிர்க்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எந்தெந்த நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் அல்லது அந்த நாடுகளுக்கு எதிரான வரிக் கொள்கை என்ன என்பது வெளியிடப்படவில்லை.
கிரீன்லாந்தை இணைப்பதற்கான டிரம்பின் முடிவுக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
கிரீன்லாந்து அமெரிக்க பாதுகாப்பிற்கு அவசியம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளதுடன்,, அது எவ்வளவு எளிதாகவோ அல்லது கடினமாகவோ இருந்தாலும் அதை கையகப்படுத்துவதாக அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
"தேசிய பாதுகாப்பிற்கு நமக்கு கிரீன்லாந்து தேவை. அவர்கள் உடன்படவில்லை என்றால், அந்த நாடுகள் மீது நான் வரிகளை விதிக்க முடியும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எநேற்று குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்து குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆனால் வளங்கள் நிறைந்த நிலப்பரப்பு.
வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்தவும், அப்பகுதியில் கப்பல்களைக் கண்காணிக்கவும் அமெரிக்காவிற்கு ஒரு நல்ல இடமாகக் கருதப்படுகின்றது.