New Updates! Fresh news just arrived.

அமெரிக்கா விடுத்துள்ள காலக்கெடு: ஈரான் அரபு நாடுகளுக்கு க...

News

அமெரிக்கா விடுத்துள்ள காலக்கெடு: ஈரான் அரபு நாடுகளுக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி!

March 23, 2026 1:49 pm
அமெரிக்கா விடுத்துள்ள காலக்கெடு: ஈரான் அரபு நாடுகளுக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி!
அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கையொன்றினை விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையினை திறப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, வளைகுடா பிராந்திய அரபு நாடுகள் மீதான தாக்குதல்களினை நியாயப்படுத்துவதற்கு தெஹ்ரான் எடுக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகின்றது.

திங்கட்கிழமை காலை ஈரானிய அரச தொலைக்காட்சியால் குறித்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானிய தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணையின் ஊடாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now