வெனிசுலா எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்ட அமெரிக்கா–வெனிசுலா...
News
வெனிசுலா எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்ட அமெரிக்கா–வெனிசுலா ஒப்பந்தம்!
வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு இடையே இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளத்தைக் கொண்ட 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வெனிசுலா தரப்பு தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்புடன் ஒப்பிடுகையில், இந்த வளம் சுமார் ஐந்தில் ஒரு பங்காகும் என குறிப்பிடப்படுகிறது.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் வெனிசுலாவின் பெட்ரோலியத் துறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்க்க முடியும் எனவும், அரசாங்கத்திற்கு 209 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படாத வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை அபிவிருத்தி செய்வதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு முக்கிய வாய்ப்பு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.