அமெரிக்க விசா கட்டணம் உயர்வு: டொனால்ட் டிரம்பின் நிர்வாகம...
News
அமெரிக்க விசா கட்டணம் உயர்வு: டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய அதிரடி
வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தினை 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான புதிய விதப்புரை ஒன்றினை அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் நேற்று (24) வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி டிரம்பால் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட குறித்த கட்டண உயர்வினை நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை செய்திருந்தது.
தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகள் பெரிதும் நம்பியிருக்கின்ற குறித்த விசாக்களுக்கான செலவு இதன் ஊடாக மிக அதிகளவில் உயரும்.
இதற்கு முன்னதாக, மத்திய நீதிபதி ஒருவர் குறித்த கட்டண உயர்வு சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்து, அதை வசூலிப்பதில் இருந்து டிரம்ப் நிர்வாகத்தினை தடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அதிபர் டிரம்பின் குறித்த உத்தரவு, பிறப்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் செப்டம்பர் மாதத்தோடு, காலாவதியாகவுள்ளது.
இருந்தபோதிலும், அதனை உறுதிப்படுத்தி விதிகளினை ஒப்புக்கொள்ளுமாறு அமெரிக்காவின் தாயகப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தாயகப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் முன்மொழியப்பட்ட 103,265 டொலர் கட்டணமானது இன்று ஃபெடரல் பதிவேடு வாயிலாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதோடு, அது இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
அத்தோடு, 30 நாட்கள் கொண்ட பொதுமக்களின் கருத்துக்களினை பெறும் கால அவகாசம் ஆரம்பமாவதோடு, இவ்வாண்டின் இறுதிக்குள் குறித்த சட்டம் இறுதி ஒப்புதலைப் பெறக்கூடும்.
சிறப்புத் துறைகளில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு ஊழியர்களினை பணிக்கு அமர்த்துவதற்காக H-1B திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 65,000 விசாக்களும், உயர் பட்டதாரிகளுக்காக மேலும் 20,000 விசாக்களும் 3 தொடக்கம் 6 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிக்கு வழங்கப்படுகின்றன.
முன்னர் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 2,000 தொடக்கம் 5,000 டொலர்கள் வரை இருந்த குறித்த விசா கட்டணமானது, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இவ்வாறு பாரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊழியர்களுக்குப் பதிலாக மலிவான வெளிநாட்டு ஊழியர்களினை பணிக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்கள் குறித்த H-1B திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக அதிபர் டிரம்ப் தெரிவிக்கின்றார்.
எனினும், தகுதியான அமெரிக்க ஊழியர்களினுடைய பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கும், சிறந்த திறமையாளர்களினை பணிக்கு அமர்த்துவதற்கும் குறித்த விசா திட்டம் மிகவும் அவசியமானது என்று வர்த்தகச் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.