மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - ...
News
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இலங்கையின் எரிபொருள் விநியோகத்திலும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன இதனை எதிர்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (22) வேண்டுகோள் விடுத்தார்.
நிலவும் விநியோகக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் பொறுப்புடனும், அவசியமான தேவைகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
எரிசக்தி நுகர்வை குறைந்தபட்ச அளவில் வைத்திருப்பது நாட்டின் தற்போதைய நிலையைச் சமாளிக்க உதவும் என அவர் குறிப்பிட்டார்.
எரிபொருளைப் பதுக்குபவர்கள் மற்றும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அத்தகைய செயல்களை நிறுத்த வேண்டும்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கம் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் எச்சரித்தார்.
கள்ளச்சந்தையில் எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்குமாறும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.