New Updates! Fresh news just arrived.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று!

News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று!

September 22, 2026 8:56 am
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று!
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று (22) கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 22ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now