New Updates! Fresh news just arrived.

யாழ் மாவட்ட எல்லே சாம்பியனாக வடமராட்சி கிழக்கு பிரதேச பெண...

News

யாழ் மாவட்ட எல்லே சாம்பியனாக வடமராட்சி கிழக்கு பிரதேச பெண்கள் அணி தெரிவு!

May 31, 2026 9:54 pm
யாழ் மாவட்ட எல்லே சாம்பியனாக வடமராட்சி கிழக்கு பிரதேச பெண்கள் அணி தெரிவு!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்டு வரும் நடப்பு ஆண்டுக்கான விளையாட்டு விழாவில், யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பெண்களுக்கான எல்லே (Elle) போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக பெண்கள் அணி முதலிடத்தைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இப்போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மணற்காடு சென். அன்ரனிஸ் இளைஞர் கழகம் மிகச்சிறப்பான முறையில் அணியை ஒழுங்கமைத்து இந்த வெற்றியைத் தேடித்தந்துள்ளது.

மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த வடமராட்சி கிழக்கு பிரதேச பெண்கள் அணி வீரர்களுக்கும், அணியை வழிநடத்திய மணற்காடு சென். அன்ரனிஸ் இளைஞர் கழகத்தினருக்கும் பிரதேச மக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட மட்டத்தில் சாம்பியனான இந்த அணி, அடுத்து நடைபெறவுள்ள தேசிய ரீதியிலான எல்லே போட்டிகளில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ளது. தேசிய மட்டத்திலும் இந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தமது பிரதேசத்திற்கும் யாழ் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now