New Updates! Fresh news just arrived.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

July 28, 2026 2:30 pm
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல், மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையின் காரணமாக, வடக்கு, வடமத்திய மாற்றும் வடமேல், மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றானது வீசக்கூடும் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியில் இருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரைக்குமான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியில் இருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரைக்குமான கடலுக்கு அப்பாலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரைக்கும் அதிகரிக்கக்கூடும் என்பதோடு, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானத்தோடு, செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now