பிரதமருடன் வன்னிலா எத்தோ விசேட சந்திப்பு; ஆதிவாசி மக்களின...
News
பிரதமருடன் வன்னிலா எத்தோ விசேட சந்திப்பு; ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!
ஆதிவாசி மக்களின் காணி உரிமைகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று பாராளுமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, ஆதிவாசி மக்கள் தங்களின் பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து வன்னிலா எத்தோ பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.
ஆதிவாசி மக்களுக்கு தங்களது பாரம்பரிய காணிகளை எவ்வித தடையுமின்றி பயன்படுத்தும் உரிமை உள்ளதாக தெரிவித்த பிரதமர், அதற்கான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல கிராம மக்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை என்பதையும் ஆதிவாசித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்ட பிரதமர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், தம்பானை பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆதிவாசி மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.