வாகன விபத்து: கைக்குழந்தை உட்பட மூவர் பலி!
News

கெப்பித்திகொல்லாவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, பதவிய சிறிபுர பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்தில் இருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியினுடைய சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தநிலையில் குறித்த கோர விபத்திற்கு முகங்கொடுத்திருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும், குறித்த விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.