New Updates! Fresh news just arrived.

வாகன இலக்க தகடுகள் 6 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படும் - ...

News

வாகன இலக்க தகடுகள் 6 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படும்

September 9, 2026 10:19 pm
வாகன இலக்க தகடுகள் 6 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படும்
தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் விநியோகிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்ட பின்னர், வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று (09) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த வருடம் கடந்த மார்ச் 10 ஆம் திகதியே வாகன இலக்கத் தகடுகளை விநியோகிப்பதற்கான ஒப்பம் செய்யப்பட்டது.

அன்றைய தினம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளன.

2023 - 2024 காலப்பகுதிக்குரிய இலக்க தகடுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த காலப்பகுதிக்குரிய 32 ஆயிரம் இலக்க தகடுகள் தற்போதும் உள்ளன.

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்குரிய இலக்கத் தகடுகளுக்காக மேலும் ஒரு ஒப்பந்தம் எதிர்வரும் வாரத்தில் செய்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்மூலம் எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினையை நிறைவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now