எரிவாயுவை பதுக்கி வைத்த விற்பனையாளருக்கு அபராதம்!
News

நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்களைத் தமது வசம் வைத்திருந்தும், எரிவாயு இருப்பில் இல்லை எனக் கூறி விற்பனை செய்ய மறுத்த கண்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
அத்துடன், சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்பட்ட 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டி, கொட்டுகொடெல்ல வீதியில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை முகவர் நிலையத்திற்கு எதிராகவே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் கண்டி மாவட்ட விசாரணை அதிகாரிகள் கடந்த 29ஆம் திகதி இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரி ஒருவர் மாறுவேடத்தில் வாடிக்கையாளராகச் சென்று, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றைக் கொள்வனவு செய்யக் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மேற்படி வர்த்தகர், தம்மிடம் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், அதனைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மேற்படி விற்பனை நிலையத்தைச் சோதனையிட்டபோது, அங்கு 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.