சமூக ஊடகங்களில் பரவி வந்த இளம் பெண்களின் காணொளி - அதிரடிய...
News
சமூக ஊடகங்களில் பரவி வந்த இளம் பெண்களின் காணொளி - அதிரடியாக கைது செய்த பொலிஸார்
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், அதில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யுவதியையும், அந்த மோட்டார் சைக்கிளையும் புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் ஹிதிகிவுல, உனவடுன மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டிய யுவதியிடம் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த யுவதி இன்று (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.